டெல்லி: தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்ததன் மூலமாக, மோடியின் உண்மையான ரூபம் வெளிப்பட்டுவிட்டதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் இதுகுறித்து கூறுகையில், வாரணாசியில் பூஜை நடத்த மோடிக்கு தேர்தல் ஆணையம் முதலில் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து தேர்தல் ஆணையத்தை வசை பாடியுள்ளார் மோடி. இது மோடியின் உண்மை சொரூபத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.
பாஜகவினர் தேர்தலில் அடையப்போகும் தோல்வியை நினைத்து விரக்தியடைந்துள்ளனர். எனவேதான் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள்.
தேர்தல் ஆணையம் பலவீனமாக இருப்பதாக யாரும் கூற வேண்டாம். ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் சிறப்பாக பணியாற்றியுள்ளது.
மேலும், இந்திய பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்துகொண்டுள்ளது. விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.