திருவனந்தபுரம்: வரதட்சணை வாங்கும் அரசு ஊழியர்கள் கண்டிப்பாக பணிநீக்கம் செய்யப்படுவர் என பேஸ் புக்கில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில் நேற்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதில், "நாட்டில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்களுக்குத் தான் எப்போதும் திருமண மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இவர்களுக்கு கேட்ட தொகை வரதட்சணையாக கிடைக்கும். எனவே வரதட்சணைக் கொடுமையை நிறுத்த வேண்டுமென்றால் முதலில் அரசு ஊழியர்களுக்குத் தான் மூக்குக் கயிறு போடவேண்டும்.
வரதட்சணை வாங்குபவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கி திருமணம் செய்தால் அவர்களின் வேலை பறிபோகும் ஆபத்தும் உள்ளது.
எனவே திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் தங்களது துறை தலைவ ருக்கு, தான் வரதட்சணை வாங்கவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியரின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து போடவேண்டும்" என்று அவர் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.