ஜம்மு: குளிருக்கு பெயர்போன ஜம்முவில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 41.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் அடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் குளிர் நடுக்கி எடுக்கும் என்று தான் பிற மாநிலத்தவர் நினைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜம்முவில் வியாழக்கிழமை வெயில் உக்கிரமாக இருந்துள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஜம்மு நகரில் வியாழக்கிழமை வெயில் அதிகபட்சமாக 41.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. இந்த ஆண்டில் இது தான் அதிகபட்ச வெப்ப நிலை ஆகும். அடுத்த சில நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றார்.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். சூரியன் அனலை கக்குவதால் சாலைகளில் குறைந்த அளவே வாகனங்களை காண முடிகிறது.
நண்பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்படியே சென்றாலும் குடை பிடித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.