You are not connected. Please login or register

Post-#12/6/2014, 7:13 am

Aditya Sundar

JOIN TODAY

சென்னையுடன் சரிசமமாக சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டது கொல்கத்தா Empty சென்னையுடன் சரிசமமாக சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டது கொல்கத்தா


பெங்களூர்: கொல்கத்தா அணி, இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருப்பதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிச்சாதனையை சமன் செய்துள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் 7ல் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று இரவு நடந்த பரபரப்பான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக கொல்கத்தா கோப்பையை கைப்பற்றியுள்ளது. நடைபெற்ற ஐபிஎல் தொடர்பான பல சுவாரசிய தகவல்கள் உள்ளன.

கோப்பையை வென்ற அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.15 கோடி வழங்கப்பட்டது. இரண்டாவதாக வந்தஅணியான பஞ்சாப்புக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டது. இவ்விரு அணிகள் மற்றும்ர மூன்றாவதுஇடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவை சர்வதேச டி-20 அணிகளுக்கிடையே நடைபெறும் சாம்பியன் டிராபிக்கு தகுதி பெற்றுள்ளன.

2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டித்தொடர்கள் முதன்முதலாக பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்ட விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இப்போதுதான் ஐபிஎல் பந்தையத்தின் பைனல் போட்டியை பெங்களூர் நடத்தியுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பைனலுக்குள் வருவது இதுதான் முதன்முறை. கடந்த 6 ஐபிஎல் போட்டிகளிலுமே அந்த அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பதிவு செய்யவில்லை. இம்முறை அந்த அணி விஸ்வரூபம் எடுத்து பைனலுக்கு வந்ததே பெரிய சாதனை. அதே நேரம் கொல்கத்தா இரண்டாவது முறையாக பைலனுக்குள் வந்தது. இருமுறையுமே அந்த அணிதான் பைனலிலும் வென்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012ம் ஆண்டு முதன்முறையாக கோப்பையை வென்றது. ஓராண்டு இடைவெளிவிட்டு மீண்டும் அந்த அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 2012 பைனலில் கொல்கத்தாவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது.

சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்ற புகழுடைய சென்னை சூப்பர் கிங்க்ஸ் 2010 மற்றும் 2012 ஆண்டுகளில் இருமுறை கோப்பையை வென்றுள்ளது. ஒரே அணி இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற சாதனையை சென்னை மட்டுமே பெற்றிருந்த நிலையில், இப்போது கொல்கத்தாவுடன் அச்சாதனை பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

மும்பை அணிக்காக, கடந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணியில் இருந்த மிட்சேல் ஜான்சனும், ரிஷிதவானும் இப்போது பஞ்சாப் அணிக்காக விளையாடினர். எனவே தொடர்ந்து இரு ஆண்டுகளாக பைனலில் விளையாடிய பெருமையை அவர்கள் பெற்றனர். சென்னை வீரர்களை தவிர்த்து இச்சாதனையை வேறு அணி வீரர்கள் செய்துள்ளது இதுதான் முதல்தடவை.

தொடரில் அதிக ரன் எடுத்தவர்களுக்கு ஆரஞ்சு கலர் தொப்பி வழங்கப்படுகிறது. அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளருக்கு ஊதா வண்ண தொப்பி வழங்கப்படும். இதில் ஆரஞ்சு கலர் தொப்பி அணிந்த வீரர் இடம்பெற்ற அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது கிடையாது. ஆனால் இம்முறை அதிக ரன் அடித்த ராபின் உத்தப்பா இடம்பெற்றிருந்த கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum