You are not connected. Please login or register

Post-#12/6/2014, 7:17 am

Aditya Sundar

JOIN TODAY

ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல் Empty ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்


டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில், தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்பட 5 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்குமாறு டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்தது கண்டு பிடிக்கப் பட்டது. இந்த சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா உள்ளிட்டோருக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கேற்ப ஆடி, பந்தயத்தின் போக்கை திட்டமிட்டு மாற்றியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர், ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் உள்பட 22 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப் பட்டவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர்.

இதற்கிடையே மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிம், அவனது கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவீது சுதானி, சல்மான் என்ற மாஸ்டர், எதேஷாம் ஆகியோர் கிரிக்கெட் சூதாட்ட பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனால் இவர்களும் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். குற்றம் சாட்டப் பட்ட அனைவர் மீதும் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேருக்கு எதிராக, ஜாமீனில் விட முடியாத வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி பாரத் பரஷார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி சிறப்பு போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல், தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரும், ஏற்கனவே அறியப்பட்ட அவர்களின் முகவரியில் வசிக்காததால், அவர்களுக்கு எதிரான பிடிவாரண்டை செயல்படுத்த முடியவில்லை என்றார்.

மேலும், தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரையும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்தார். இதையடுத்து, குற்றவியல் நடைமுறை சட்டம் 82 (தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்தல்), 83 (சொத்து பறிமுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கையை தொடங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரின் ஏற்கனவே அறியப்பட்ட முகவரியில், பிடிவாரண்டு குறித்த நோட்டீசை போலீசார் ஒட்ட வேண்டும். அந்த நோட்டீசை தேசிய நாளிதழ்களில் வெளியிடச் செய்ய வேண்டும். இதுபற்றிய அறிக்கையை ஆகஸ்டு 16-ந் தேதிக்குள் போலீசார் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான வாதங்கள், ஆகஸ்டு 16-ந் தேதி தொடங்கும்' என்றார். மேலும், இவ்வழக்கு அடிக்கடி தள்ளி வைக்கப் படுவதற்கு கவலை தெரிவித்த நீதிபதி, குற்றப்பத்திரிகைகளின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதுபற்றி அரசு வக்கீல் ராஜீவ் மோகன் கூறுகையில், ‘தாவூத் இப்ராகிமுக்கு இந்தியாவில் உள்ள சொத்துகளை டெல்லி போலீசார் கண்டறிந்து, அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள்‘ என்றார்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum