டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை ஒடிஷாவின் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பிஜூ ஜனதா தள எம்.பிக்கள் இன்று டெல்லியில் சந்தித்து பேசினர்.
பிரதமர் மோடியை ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் 24 பிஜூ ஜனதா தள எம்.பிக்களும் இன்று பகலில் சந்தித்தனர். அப்போது ஒடிஷா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது, கனிம வளங்களுக்கான ராயல்டி தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், ஒடிஷா மாநிலத்துக்குரிய தேவைகள் ,திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விவாதித்தோம். அவரும் எங்களது கோரிக்கைகளை கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிஜூ ஜனதா தளம் இணைவது குறித்து விவாதிக்கப்படவில்லை என்றார்.