தஞ்சாவூர்: தஞ்சையில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெறும் மே தின விழா பொதுக் கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்த முன்னாள் கவர்ச்சி நடிகை பபிதாவை அழைத்துள்ளனர்.
நாளை மாலை 6 மணிக்கு இந்த பொதுக் கூட்டம் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வடக்குப்பட்டு சேகர் தலைமை தாங்குகிறார்.
இக்கட்டத்தில்தான் பபிதா சிறப்புரை நிகழ்த்தப் போகிறார். முன்னாள் கவர்ச்சி நடிகைக்கும், தொழிலாளர்கள் தினத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

இந்தக் கூட்டததில் அமைச்சர் வைத்திலிங்கம், அதிமுக மருத்துவ அணிபொருளாளர் டாக்டர் வடிவேல், முன்னாள் அமைச்சர் கே.கே.பால சுப்பிரமணியன் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.