You are not connected. Please login or register

Post-#129/4/2014, 10:39 pm

Aditya Sundar

JOIN TODAY

மரண பயம் வேண்டாம்...! வாழத் தொடங்குங்கள்...! Empty மரண பயம் வேண்டாம்...! வாழத் தொடங்குங்கள்...!


எப்பொழுதுமே நாம் நிலைத்திருக்க விரும்புகிறோம். முடிவில்லா நேரம், எல்லையில்லாத வாய்ப்புகள் மற்றும் நம்முடைய உயிரின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நாம் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். எனினும், நம்முடைய நேரம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது மற்றும் நம்மைத் தாண்டி எதன் மீதும் கட்டுப்பாடு இல்லை. மனரீதியான உதவி தேவைப்படுபவர்களுக்கு, மரண பயம் சாதாரணமாக இருக்கும். வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பயம் அனைவரையும் வருத்தி வருகிறது.

மரண பயத்தின் விளைவாக, சில மனிதர்கள் கடுமையான கவலை, பயங்கள், பெரும் அச்சம் மற்றும் சித்தப்பிரமை பிடித்திருப்பார்கள். அவர்களுடைய சக்திகள் எல்லாம் இவற்றுடன் சண்டை போடுவதிலே கரைந்து போயிருக்கும். இந்த பயத்துடன் போராடுவதற்கு ஒவ்வொருவரும் மாறுபட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

மரணம் தங்களுக்கு வெகுதூரத்தில் உள்ளதாக சில பேர் தங்களிடம் சொல்லிக் கொண்டு தவிர்த்திருப்பார்கள், வேறு சிலர் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் சென்று கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் பெயரும், புகழும் பெற்று மரணத்தை வென்று, மக்களின் நினைவுகளில் இருக்க முயற்சி செய்வார்கள். இன்னும் சிலர் தங்களுடைய உடல் நலத்தையும் மற்றும் மனநலத்தையும் பேணுவார்கள்.

இவ்வாறு மரண பயத்திலிருந்து விடுபட அனைவரும் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று நம்மில் பலரும் வருந்திக் கொண்டிருப்போம். ஏனெனில் நாம் மரணத்தை எதிர்கொண்டதில்லை, எனவே நாம் ஏன் அதைக் கண்டு பயப்படுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்வில் அர்த்தம் இல்லை என்று அறிந்த போது மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள் என்று மனரீதியாக ஆழமாக சுயபரிசோதனை செய்த போது தெரிந்துள்ளது. இதன் விளைவாக அவர்கள் ஏமாற்றம், குற்ற உணர்வு மற்றும் கோபம் போன்ற உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள்.

பெற்றிருப்போம். பிறந்த வேளையில் நாம் அனைவரும் விதைகளைப் போல இருந்தோம். அப்போது வாழ்க்கையின் குறிக்கோள் வளர்ச்சியாகவும், வளரவும் மற்றும் நம்மால் முடிந்த சிறந்த விஷயத்தை செய்வதாகவும் இருந்தது. எனினும், நம்மில் பலரும் இந்த செயல்பாட்டில் முழுமையான கவனத்தை செலுத்தவில்லை. இதன் விளைவாக வளர்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடுகிறது. சண்டைகள், அதிர்ச்சியான அனுபவங்கள், சுயநலம் கொண்ட போர்கள் மற்றும் நமக்குள் இருக்கும் தடைகளால் நாம் தோல்வியடைகிறோம். இதனால் நமது வாழ்வின் சிறந்த விஷயத்தை தர முடியாமல் போகிறோம்.

நம்முடன் நெருக்கமாக இருப்பவர்களிடம் நம்மால் முழுமையாக அன்பு செலுத்த முடியாத போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. மிகவும் நெருக்கமான உறவுகளில், சில மனிதர்கள் நிறைய விஷயங்களைப் பெற்றுக் கொள்வார்கள் மற்றும் குறைவானவற்றை திரும்பக் கொடுப்பார்கள். மிகவும் வசதியாக இருக்கும் வேளைகளில், நீண்ட நாட்களுக்கு திடமான நிலையில் இருப்போம். நமக்குள் இருக்கும் மனசாட்சிக்கு நாம் ஏமாற்றுகிறோம் என்று தெரிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட நாளில் நமக்குள் இருக்கும் மனசாட்சி இதனை குற்ற உணர்வாக வெளிப்படுத்தும். அப்போது நாம் நம்முடைய தவறை நாம் உணர்ந்து, உதவிக்கு ஆளின்றி இருப்போம்.

இதற்கு மாறாக, உறவுகளில் தங்களுடைய உணர்வுகள், தேவைகள் மற்றும் ஆசைகளை வெளிப்படுத்தாமல், ஆனால், நிறைய விஷயங்களை மற்றவர்களுக்கு கொடுப்பவர்களாக சில மனிதர்கள் இருக்கிறார்கள். இது ஆத்திரத்தையும், கோபத்தையும் மூட்டும். அவர்கள் தங்களுடைய கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அது மற்றவர்களுடனான உண்மையான தொடர்புகளை துண்டித்து விடுகிறது. ஏமாற்றம், குற்ற உணர்ச்சி மற்றும் கோபம் ஆகியவை வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடுகின்றன. பொதுவாகவே, இந்த தேவையற்ற விஷயங்களை சுத்தம் செய்வதற்காகவே மக்கள் வாழ்க்கையுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே மரணத்தின் மீதான பயத்திலிருந்து வெளிவர, நாம் இருப்பதன் அர்த்தத்தை நாம் தொடர்ந்து தேட வேண்டும். அனைத்து விதமான இன்னல்களையும் எதிர்கொள்ளும் விதமாக நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தவைகள் மற்றும் குறிக்கோள்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் மற்றும் நமது கவனத்தை அவற்றின் மீது மீண்டும் கொண்டு வரவும், அவற்றை நாம் உணர வேண்டும். யாரையும் நமது விருப்பத்திற்கு உட்படுத்தாமல், முழுமையாக உறவுகளை பதிலாகத் தர வேண்டும். நமக்குத் தேவைப்படுவதைப் போலவே, நமக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் அன்பு, பாசம் மற்றும் கவனம் தேவைப்படும். நாம் அவர்கள் மீது கோபம் கொண்டால், அவரை காயப்படுத்தாமல் அல்லது வெறுக்காமல் அவரிடம் அதைத் தெரியப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

நாம் உயிரோடு இருப்பதன் அர்த்தத்தை கண்டறிவதன் மூலம், நமது குறுகிய சுயநலமான மனதிலிருந்து விலகிச் செல்கிறோம். நமது வாழ்வின் அர்த்தத்தை உருவாக்கவும் மற்றும் சுயநலத்தைக் கடந்து செல்லவும் முடிந்தால், மரணம் என்பது பயமாக இருக்காது. வாழ்க்கையை ஒரு விடுவிக்கும் சாகசமாக நாம் பார்க்கத் தொடங்குவோம், அங்கு அளவற்ற வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

Written by: Boopathi Lakshmanan

மரண பயம் வேண்டாம்...! வாழத் தொடங்குங்கள்...! 6e3tw8

Post-#229/4/2014, 11:17 pm

Admin

Admin
JOIN TODAY

மரண பயம் வேண்டாம்...! வாழத் தொடங்குங்கள்...! Empty Re: மரண பயம் வேண்டாம்...! வாழத் தொடங்குங்கள்...!


Thank You.........

Test Reply

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum