You are not connected. Please login or register

Post-#15/5/2014, 4:30 pm

Aditya Sundar

JOIN TODAY

ரயில் நிலையங்களில் செயல்படாத கேமராக்கள்- சென்ட்ரல் குண்டு வெடிப்பு விசாரணை பின்னடைவு Empty ரயில் நிலையங்களில் செயல்படாத கேமராக்கள்- சென்ட்ரல் குண்டு வெடிப்பு விசாரணை பின்னடைவு


சென்னை: பெங்களூர்-சென்னை சென்ட்ரல் இடையிலான சில ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத நிலையில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஸ்வாதி என்ற பெண் இன்ஜினீயர் உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர்.

இச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டு வெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரம் முன்பாக நபர் ஒருவர், குண்டு வெடித்த பெட்டிக்கு முந்தைய பெட்டியிலிருந்து அவசரமாக இறங்கி செல்லும் ரகசிய கேமராவில் பதிரான காட்சியை போலீசார் வெளியிட்டனர். சென்னையில் பதிவான அந்த நபரின் உருவம், பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவிலும் பதிவாகியிருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த நபரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் பெங்களூருவில் பதிவான காட்சிகள் தெளிவாக இல்லாததால் இரண்டு இடங்களிலும் பதிவாகியிருப்பது ஒரே நபர்தானா என்ற குழப்பம் எழுந்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே குண்டுகள் வெடித்த பெட்டிகளில் (எஸ் 4ல் இருக்கை எண்.70, எஸ் 5ல் இருக்கை எண்.28) 2 பேர் போலி முகவரி கொடுத்து தட்கல் டிக்கெட் எடுத்து பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

70ம் எண் இருக்கை அகமது உசேன் என்பவரின் பெயரிலும், 28ம் எண் இருக்கை ஜான்சன் என்பவரின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் ரயில் நிலையத்தில் கடந்த 29 ஆம் தேதி அன்று, காலை 10.07 மணிக்கு தத்கலில் 2 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அகமது உசேன் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம், மால்டா வரை செல்வதற்கும், ஜான்சன் பெயரில் குவாஹாட்டி வரை செல்வதற்கும் போலியான ஆவணங்களை கொடுத்து தத்கல் டிக்கெட்டை எடுத்துள்ளனர். ஜான்சன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் தொலைபேசி எண் எதுவும் இல்லை.

இந்த ரயில் நிலையங்கள் சிலவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. கேமராக்கள் பொருத்தப்பட்ட ரயில் நிலையங்களிலும் அவை சரிவர வேலை செய்யவில்லை என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இதனால், குண்டு வெடிப்பு குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக செயல்பட்டிருந்தால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்ளைக் கண்டுபிடிக்கத் தேவையான தெளிவான ஆதாரங்கள் கிடைத்திருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum