- Code:
[img]
[/img]

இதற்கு அடுத்த ட்வீட்டில் ஆங்கிலத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.
நேற்று முன்தினம்தான் ரஜினி ட்விட்டரில் இணைந்தார். 24 மணி நேரத்தில் 2.15 லட்சம் பேர் அவரைப் பின்தொடர ஆரம்பித்தனர். இன்று அவரை பின்பற்றுவோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தொடுகிறது. இந்தியாவில் ட்விட்டரில் இணைந்த எந்தப் பிரபலத்துக்கும் முதல் நாளில் இவ்வளவு எண்ணிக்கையில் பாலோயர்கள் குவிந்ததில்லை. ரஜினிக்கு அடுத்து பார்த்தார் ஆமீர்கான். ஆனால் அவருக்கு கிடைத்தது வெறும் 46 ஆயிரம் பேர்.
வேறு எந்தப் பிரபலமும் நெருங்க முடியாத உயரத்தில் ரஜினியின் புகழ் உள்ளதை அவரது ட்விட்டர் பிரவேசம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. முதல் நாள் போட்ட ட்வீட்டில், கடவுளுக்கு நன்றி. அனைவருக்கும் வணக்கம் என்று கூறி, தனது டிஜிட்டல் உலகப் பயணத்தை ஆரம்பிப்பதாகக் கூறியிருந்தார்.
தனக்குக் கிடைத்த அபார வரவேற்பைக் கண்டு மகிழ்ந்த ரஜினி, அடுத்தடுத்த ட்வீட்டுகளைப் பதிய ஆர்வமாகிவிட்டாராம். இன்று இரண்டாவது நாள் இரு ட்வீட்டுகளை பதிவு செய்துள்ளார். இனி அடிக்கடி தனது கருத்துக்களை அவர் ட்விட்டரில் தெரிவிப்பார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.