மும்பை: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.
பாலிவுட் நட்சத்திரங்களில் சிலர் சர்ச்சைகளில் சிக்கினால் கோபப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுவார்கள். அப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வார்த்தைகள் விட்டிருக்கிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆன ராணி முகர்ஜி.
அவர் சிக்கிய சர்ச்சைகள் பற்றி பார்ப்போம்.
தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுடனான உறவு குறித்து வாய் திறக்காமல் இருந்தார் ராணி. இந்நிலையில் கடந்த 21ம் தேதி அவர்களின் திருமணம் இத்தாலியில் ரகசியமாக நடைபெற்றது.
நடிகை சிமி கரேவால் நடத்தும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணியிடம் ஆதித்யா சோப்ராவுடனான உறவு குறித்து கேட்கப்பட்டது. அவ்வளவு தான் ராணிக்கு கோபம் வந்து சிமியை பார்த்து உங்களை பற்றி பல ரகசியங்கள் எனக்கு தெரியும். அதை எல்லாம் நான் இங்கு சொல்ல நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று பொறிந்து தள்ளிவிட்டார்.
ராணிக்கும் அவரது உறவுக்கார சகோதரியான நடிகை கஜோலுக்கும் ஆகாது. 2012ம் ஆண்டு யஷ் சோப்ரா கடைசியாக இயக்கிய ஜப் தக் ஹை ஜான் பட பிரீமியருக்கு விருந்தாளிகளை அழைக்கும் பொறுப்பு ராணிக்கு கொடுக்கப்பட்டது. ஊரையே அழைத்த அவர் கஜோலை அழைக்கவில்லை. ஏன் கஜோலை ராணி தனது திருமணத்திற்கும் அழைக்கவில்லை.
ஹத் கர் தி அப்னே படத்தில் நடித்தபோது ராணிக்கும், திருமணமான நடிகர் கோவிந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்பட்டது. கோவிந்தா ராணிக்கு பரிசுகள், வைரம், கார், வீடு என்று வாங்கிக் கொடுத்ததாக செய்திகள் வந்தன.
சல்தே சல்தே இந்தி படத்தில் ஷாருக்கானுடன் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் சத்தமில்லாமல் அந்த கதாபாத்திரம் ராணிக்கு சென்றுவிட்டது. அதில் இருந்து ஐஸுக்கும், ராணிக்கும் ஆகாது. இந்நிலையில் ராணி காதலித்த அபிஷேக் ஐஸ்வர்யா ராயை மணந்தார். ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பிறகு குறையாத உடல் எடை குறித்து ராணி விமர்சித்தார்.
ராணி முகர்ஜியை திருமணம் செய்யக் கூடாது என்று ஜெயா தனது மகன் அபிஷேக் பச்சனுக்கு உத்தரவிட்டாராம். இதனால் அபிஷேக் ராணியை பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராணிக்கும், ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடந்துள்ளது.
ராணி நடிகர் விவேக் ஓபராயுடன் சண்டை போட்டுள்ளார். ராணியுடன் பழகாதே என்று அவர் தன்னுடைய அப்போதைய காதலியான ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிந்த ராணி விவேக்கிடம் தகராறு செய்துள்ளார். ராணியும், விவேக்கும் சேர்ந்து அலைபாயுதே இந்தி ரீமேக்கான சாத்தியாவில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.