You are not connected. Please login or register

Post-#17/5/2014, 7:38 pm

Aditya Sundar

JOIN TODAY

ஆண்டவன் சொல்றான்.. டிவிட்டரை ஃபாலோ பண்றான்..! Empty ஆண்டவன் சொல்றான்.. டிவிட்டரை ஃபாலோ பண்றான்..!


சென்னை: சூப்பர் ஸ்டார்... நேத்துப் பொறந்த குட்டிப் பாப்பாவிலிருந்து பல்லு போன தாத்தாவரை இந்தப் பெயருக்கென்று ஒரு தனி மவுசு.. ரவுசு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதுதான் ரஜினி மாஜிக்...

இப்போது இந்த மாஜிக் சமூக வலைத்தளத்தில் புதிய மாஜிக்கை ஏற்படுத்தி விட்டது. அது ரஜினிகாந்த் டிவிட்டரில் சேர்ந்ததால் ஏற்பட்ட அலை..

டிவிட்டருக்குள் ரஜினி நுழைந்த நொடியிலிருந்து அவர் வழியைப் பின்பற்றி பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு டிவிட்டருக்குள் பிரவேசம் செய்த அமிதாப் பச்சன் போன்ற மிகப் பெரிய ஸ்டார்களுக்கு தொடக்கத்தில் கிடைத்த பாலோயர்களை விட ரஜினிக்கு மிகப் பெரிய அளவில் கிடைத்திருப்பதாக புள்ளி விவரத் தகவல் ஒன்று கூறுகிறது.

அதிக அளவிலான இந்தியர்களால் நேசிக்கப்படும் ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இது ஒரு சின்ன புகழஞ்சலி...

அருணாச்சலத்தில் ரஜினி பேசிய வசனம் இன்று அவருக்கே கூட யூஸ் ஆகிறது பாருங்கள்.. எதையுமே ரஜினி யோசித்துதான் செய்வார்.. கடவுள் விருப்பப்படியே தன் பாதை என்பதும் அவரது நம்பிக்கை.. இப்போது கூட டிவிட்டருக்கு அவர் வந்திருப்பதும் ஆண்டவன் சொல்லிய சொல்லாகவே இருக்கும் என்று நம்புவோம்...

''உனக்கு எல்லாம் இருக்காங்க-எனக்கு யார்றா இருக்கா..''

இது தளபதி பட வசனம்.. சூப்பர் ஸ்டாருக்கு எல்லாருமே இருக்காங்க.. ஆனால் டிவிட்டருக்கு யாரு இருக்காங்க - இனி ரஜினியை விட்டா..

இது கோச்சடையான் பட வசனம். உண்மைதான்.. இதுவரை டிவிட்டருக்கு வராமல் இருந்த ரஜினியே மாறி விட்டார்.. ஆனால் நிச்சயம் இனிமேல் டிவிட்டர் ரஜினியை விட்டு விலகாது என்று நம்பலாம்...

எந்திரனில் எதிர்ப்புகளை டொப்பு டொப்பென்று சுட்டுத் தள்ளிய சூப்பர் ஸ்டார் இனி டிவிட்டரில் டக்கு டக்கென்று டிவிட் போட்டு அமர்க்களப்படுத்துவார் என்று நம்பலாம்.

மொட்டை யாரு வேண்டுமானாலும் போடலாம்.. அதேபோலத்தான் டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் டிவிட் செய்யலாம்.. ஆனால் ரஜினி போட்டா அது ஹிட்டு.. இனிமேல் டிவிட்டரிலும் ரஜினி மட்டுமே சூப்பர் டிவிட்டு..

ரஜினி ஒரு தடவை டிவிட் செய்தால் அது ஓராயிரம் டிவிட்டுக்கு இனிமேல் சமம்..

டிவிட்டர் என்றால் இதுவரை யாராவது திக்கு விஜய் சிங்குகள் போன்றோர் திக்கு விஜயம் செய்யும் தளமாகவே இருந்தது. ஆனால் இனிமேல்தான் இது கலக்கல் களமாக மாறப்போகிறது... வெயிட் அன்ட் வாட்ச்...

ஆட்டோக்காரன் மீட்டர் போட்டா அது ஒரு மாதிரி.. ஆனால் சூப்பர் ஸ்டார் டிவிட்டைப் போட்டா.. அது வேற வேற வேற மாதிரி....

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum