You are not connected. Please login or register

Post-#17/5/2014, 7:51 pm

Aditya Sundar

JOIN TODAY

காரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்! - பூனம் பாண்டே Empty காரில் என்னோடு இருந்தது என் தம்பி.. தலிபானை விட மோசம் மும்பை போலீஸ்! - பூனம் பாண்டே


மும்பை: காருக்குள் குடித்துவிட்டு ஆபாச செயலில் நான் ஈடுபட்டதாக போலீசார் கூறுவது முழுப் பொய். அன்று நான் மது அருந்தவில்லை... என்னுடன் இருந்தவர் என் சொந்த சகோதரன், என்று கூறியுள்ளார் பூனம் பாண்டே.

பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் மும்பை மிரா ரோட்டில் உள்ள பூங்கா அருகே தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடை படுகவர்ச்சியாக இருந்தது.

அவரைக் கவனித்துவிட்ட சிலர் காரைச் சூழ்ந்து கொண்டனர். தகவலறிந்ததும் போலீசார் வந்து, ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.

பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக பூனம் பாண்டேயை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர்.

காருக்குள் பூனம் பாண்டே 'கசமுசா' வேலையில் இருந்ததாகவும், இது சட்டப்படி தவறு என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி மீடியாவில் பரபரப்பைக் கிளப்பியது. விளம்பரம் தேடுவதற்காக பூனம் இப்படி நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் பூனம் பாண்டே அனைத்தையும் மறுத்துள்ளார். தான் காருக்குள் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், ஆபாசமான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "மும்பை போலீசார் என்னிடம் முரட்டுத்தனமாக கேள்விகளை கேட்டனர். காரில் இருந்தவருடன் தவறாக நடந்து கொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனது குடும்ப பெயரே எனக்கு எதிராக ஆகியுள்ளது. என்னுடன் காரில் இருந்தது சகோதரனே. இது தலிபான் விட மோசமாக உள்ளது. காரில் இருந்தபோது 10.30 மணி இருக்கும். பெருநகர விதியின்படி இது ஒன்னும் கால தாமதம் இல்லை.

நான் என்னுடைய சகோதரருடன்தான் இருந்தேன். அவர் என்னுடைய சொந்த சகோரரர் அதித்யா பாண்டே. நான் ஒன்றும் குடித்துவிட்டு இருக்கவில்லை. தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் போலீசால் விசாரிக்கப்பட்டேன்.

எனது பெயரை கேட்கும் வரை போலீசார் சாதாரணமாக நடந்து கொண்டனர். நான் பூனம் பாண்டே என்று கூறியதும் அவர்களது நடவடிக்கை மாறியது. அவர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள தொடங்கினர். நான் காருக்குள் இருந்த நபருடன் என்ன செய்தேன் என்று தெரிந்து கொள்வதில்தான் ஆர்வம் காட்டினர்.

நான் பூனம் பாண்டே என்று தெரிந்ததும் போலீஸ்காரர்கள் உற்சாகம் அடைந்தனர். அனைத்து மீடியாக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. என்னை பற்றி பலவிதமாக தகவல்கள் பரப்ப ஆரபித்துவிட்டன.

என் சகோதரருடன் சென்ற எனக்கே இந்த நிலை என்றால், தங்களது ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லும் மற்ற பெண்களின் நிலையை யோசித்து பார்க்கவே முடியவில்லை. தற்போது மும்பை நிர்வாகத்தில் தலிபானிஸத்தைப் பார்க்க முடிகிறது.

பாண்டே என்பதால் உள்ளூர் சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகம் என்னை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது (உபி, பீகார்காரர்களுக்கு மும்பையில் நெருக்கடி உள்ளது). நானும் மும்பை பெண் என்பதை அவர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

எப்போதும் போலத்தான் அன்றும் ஆடை அணிந்திருந்தேன். நடந்ததைப் பார்த்து என்னுடைய சகோதரர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். என்னை எனது பெற்றோர் திட்டினர்கள். இது என் தவறா, நான் யார்? என்பதை நீங்களே சொல்லுங்கள்," என்றார்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum