You are not connected. Please login or register

Post-#17/5/2014, 7:56 pm

Aditya Sundar

JOIN TODAY

அஜீத் படத்தின் பெயர் 'சத்யா'? Empty அஜீத் படத்தின் பெயர் 'சத்யா'?


சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் படத்தின் பெயர் சத்யா என்று செய்திகள் வெளியாகின.

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் அனுஷ்கா அவருடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார். படப்பிடிப்பு துவங்கியவுடன் முதலில் ஆக்ஷன் காட்சிகளை தான் படமாக்கினர்.

இந்நிலையில் படத்தின் தலைப்பு என்னவென்று தெரிந்து கொள்ள அஜீத் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அஜீத் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருவதால் படத்திற்கு ஆயிரம் தோட்டாக்கள் என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை கௌதம் மறுத்துவிட்டார்.

தனது படத்திற்கு அஜீத் கதாபாத்திரத்தின் பெயரை வைக்கும் திட்டம் உள்ளதாகவும், இது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் கௌதம் கூறினார்.

படத்தில் அஜீத்தின் பெயர் சத்யதேவ் என்று கூறப்படுகிறது. இதனால் படத்தின் தலைப்பு சத்யா என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை தயாரிப்பு வட்டம் மறுத்துவிட்டது.

1988ம் ஆண்டு கமல் ஹாஸன் தயாரித்து நடித்த படத்தின் பெயர் சத்யா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார்.

ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு துவங்கி படம் முடிகிற வேளையில் தான் தலைப்பையே தேர்வு செய்தார்கள். ஒரு வேளை கௌதம் படத்திற்கும் அப்படி செய்தாலும் செய்யலாம்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum