You are not connected. Please login or register

Post-#18/5/2014, 2:47 pm

Bharathi

JOIN TODAY

நாளை பிளஸ்- 2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட்டை காண உதவும் வெப்சைட்டுகள்- செல்போன் எஸ்எம்எஸ் எண் Empty நாளை பிளஸ்- 2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட்டை காண உதவும் வெப்சைட்டுகள்- செல்போன் எஸ்எம்எஸ் எண்


சென்னை: தமிழக பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையத்தளங்களில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும்.

1. tnresults.nic.in/

2. dge.tn.gov.in/

3. dge1.tn.nic.in/

4. dge2.tn.nic.in/

5. dge3.tn.nic.in/

பிளஸ்-2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், மற்றும் நர்சிங், பிஸியோ தெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர முடியும்.

மேலும், பி.இ, பி.டெக், உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்புகள், கால்நடை மருத்துவப்படிப்புகள், கலை அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட எந்த படிப்புகளிலும் சேர முடியும்.

அதனால் எப்போது பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் என்று பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் காத்திருக்கிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது.

தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் ஆசிரியர்களை கொண்டு நடைபெற்றது.

வழக்கமாக தென் மாவட்ட விடைத்தாள்கள் வட மாவட்டங்களுக்கும், வட மாவட்ட விடைத்தாள்கள் தென் மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும். ஆனால் கடந்த வருடம் விடைத்தாள்கள் ரெயிலில் கொண்டு செல்லும்போது அவை ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து சேதம் அடைந்து பிரச்சனை ஏற்பட்டது.

இதன் காரணமாக, இந்த வருடம் பாதுகாப்பு கருதி, அருகே உள்ள மாவட்டங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து விட்டது. விடைத்தாளில் போடப்பட்டுள்ள மதிப்பெண்கள் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்கள் வாரியாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டது.

தற்போது மதிப்பெண்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு அந்த பணியும் முடிந்துவிட்டது. தேர்வு முடிவு தயாராக உள்ளது.

முடிவு நாளை காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில், இயக்குனர் கு.தேவராஜனால் வெளியிடப்பட உள்ளது. முடிவை வெளியிட அவருக்கு உறுதுணையாக இணை இயக்குனர்கள் ராஜ ராஜேஸ்வரி, ராமராஜன் ஆகியோர் உள்ளனர்.

தேர்வு முடிவை மாணவர்கள் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ளவும் அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கு செல்போன் தகவல் பக்கத்தில் TNBOARD என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, இடைவெளிவிட்டு பிறகு பதிவு எண்ணையும் அதைத் தொடர்ந்து பிறந்த தேதியையும் பதிவுசெய்து 9282232585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவை அறியலாம்.

தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியான பின்னரே இந்த வசதி செயல்படத் தொடங்கும். எனவே, அதற்கு முன்பாக தேர்வு முடிவை அறிய மாணவர்கள் முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum