டெல்லி: படத்தின் தரம் குறைவாக இருந்ததால் மல்டிபிளக்ஸிடம் ரூ.50 ஆயிரம் கேட்டு ஒருவர் வழக்கு தொடர்ந்து குட்டுபட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் லவ்னிஷ் குமார் பரத்வாஜ். அவர் கடநத் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜௌரி கார்டனில் உள்ள மூவி டைம் மல்டிபிளக்ஸில் ராக்ஸ்டார் இந்தி படம் பார்த்துள்ளார். அப்போது சில காட்சிகள் திரையில் சரியாகத் தெரியவில்லையாம். மேலும் படம் அவ்வப்போது தடைபட்டு காண்பிக்கப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து அவர் படத்தை திரையிட்டது சரியில்லை என்றும், அதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்றும் கூறி மேற்கு டெல்லி மாவட்ட நுக்ரவோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் தனக்கு ஏற்பட்ட தலைவலி, எரிச்சல் மற்றும் மன உளைச்சலுக்காக மல்டிபிளக்ஸ் தனக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் கூறுகையில், படம் பிடிக்கவில்லை என்றால் அங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டியது தானே. இதில் மன உளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு எங்கிருந்து வந்தது. படத்திற்கு வாங்கிய டிக்கெட்டை விட அதிக பணத்தை செலவு செய்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
படம் காண்பிக்கப்பட்ட திரையின் தரம் சரியில்லை என்று கூறி சில்லறை பணத்தை இழந்ததற்காக ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடு கேட்டு தீர்ப்பாயத்திற்கு வருவதை அனுமதிக்கக் கூடாது என்றது.
இந்நிலையில் தாங்கள் திரையிட்ட படத்தின் தரம் நன்றாக இருந்ததாக மல்டிபிளக்ஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.