You are not connected. Please login or register

Post-#19/5/2014, 5:36 pm

Aditya Sundar

JOIN TODAY

முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!! Empty முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!!


அழகிய ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையை உற்சாகமாக கொண்டாடும் பொருட்டாக, ரம்மியமான சூழலை இரசித்துக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தால் முகத்தில் ஒரு பெரும் புள்ளி! இதனை மறைக்கும் மேக்கப் முறைகள் நமக்கு கைவந்த கலையாக இருந்தாலும், அது ஏன் வந்தது என்று அறிய வேண்டியதும் முக்கியமான விஷயமல்லவா? இது போன்று அடிக்கடி முகப்பருக்கள் முகத்தில் எட்டிப் பார்க்கும் அனுபவம் பெறுபவரா நீங்கள்? அல்லது இந்த முகப்பருக்கள் ஏன் வருகின்றன என்று குழம்பித் தவிப்பவரா?

உங்களுடைய முகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் உடலின் பிற உறுப்புகள் மற்றும் செயல்பாடுகளுடன் தொடர்பில் உள்ளன. எனவே, முகத்தில் ஏதாவதொரு இடத்தில் பரு வந்தால், அந்த இடத்துடன் தொடர்புடைய உறுப்பில் ஏதோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது என்று உணரலாம். உடல் ஆரோக்கியத்தைப் பற்றி முகப்பருக்கள் என்ன சொல்கின்றன என்று அறிய தொடர்ந்து படியுங்கள்.

உங்களுடைய நெற்றியில் முகப்பருக்கள் இருந்தால், உங்களுடைய வயிற்றிலும், சாப்பிடும் உணவிலும் பிரச்சனைகள் உள்ளன என்பது உறுதி! எனவே, தேவையற்ற ஜங்க் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, நிறைய தண்ணீர் குடியுங்கள். இதன் மூலமாக வயிற்றில் தொற்று ஏற்பட்டு பெரிய அளவில் பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்க முடியும்.

ஆம், புருவங்களுக்கிடையில் சிறிய அளவில் முகப்பருக்கள் வந்தால், உங்களுடைய கல்லீரல் அதிகமான வேலைப்பளுவை கொண்டுள்ளது என்று அர்த்தமாகும். எனவே, ஆல்கஹால், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சற்றே நிறுத்த வேண்டிய நேரம் இது. அதே போல, பின்னிரவு நேரங்களில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, இரவில் நன்றாக உறங்க முயற்சி செய்யுங்கள். தொடக்க நிலையில் உள்ளவர்கள் சுத்தமான பதார்த்தங்களால் செய்யப்பட்ட மற்றும் GM டயட் ஆகிய உணவு பழக்கங்களை மேற்கொண்டு இந்த பிரச்சனையை சமாளிக்கலாம்.

உங்களுடைய கன்னங்கள், கண்கள் மற்றும் புருவங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருக்கள் வந்தால், உடலுக்கு போதிய அளவு தண்ணீரைக் கொடுக்க வேண்டும் என்று உங்களுடைய சிறுநீரகம் கோரிக்கை வைப்பதாக அர்த்தம்! ஒரு பாட்டில் தண்ணீரை எப்பொழுதும் அருகில் வைத்திருங்கள் மற்றும் நீர்ச்சத்து நிரம்பிய முலாம்பழம் மற்றும் தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிட்டு வாருங்கள். இந்த முகப்பருக்களைச் சுற்றிலும் கருமையான வளையங்கள் இருந்தால், போதிய அளவு தண்ணீர் இல்லாததே இதற்குக் காரணமாகும்.

மூக்கில் முகப்பரு வந்தால் நீங்கள் காதல் வயப்பட்டு இருக்கிறீர்கள் என்று பொருள் கிடையாது. எனினும், இது இதயம் தொடர்பான பிரச்சனையை வெளிப்படுத்துகிறது என்பது உண்மை. இரத்த அழுத்தம் உயரும் போதும் அல்லது குறையும் போதும் மற்றும் வைட்டமின் பி குறைவாக இருக்கும் போதும், உங்கள் மூக்கின் மேல் இந்த பரு அடையாளம் உருவாகும். ஆகவே புத்துணர்ச்சியுள்ள காற்றை சுவாசிக்கவும், தினமும் உடற்பயிற்சி செய்யவும் மற்றும் வைட்டமின் பி சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிடவும்.

நீங்கள் புகைப்பிடிப்பவராகவோ அல்லது சுவாசம் தொடர்பான அலர்ஜிகளோ உங்களுக்கு இருந்தால், கன்னத்தில் ஒன்று அல்லது இரண்டு பருக்கள் வரலாம். எனவே புகைப்பிடிப்பதை நிறுத்தியும் மற்றும் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்தும் நுரையீரலை சீராக இயங்கச் செய்து சுவாசத்தை சரிசெய்யலாம். மேலும், வெள்ளரிக்காய், முலாம்பழம் மற்றும் பழச்சாறுகள் போன்ற குளுமையான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொண்டு உடலில் அதிகமாக இருக்கும் வெப்பத்தையும் குறைக்கலாம்.

PMS எனப்படும் மாதவிடாய்க்கு முன்னர் ஏற்படும் பிரச்சனைகள் நமது தோலுக்கு போதுமான அளவு தீங்குகளை செய்து விடுகின்றன. ஆனால், உங்களுக்கு இந்த மாதவிடாய் சுழற்சி பருவத்தைக் கடந்த பின்னரும், தொடர்ந்து முகப்பருக்கள் தாடையில் வந்து கொண்டிருந்தால், உடலில் ஹார்மோன் சமநிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என்று பொருளாகும். எனவே, ஒரு மகப்பேறு மருத்துவரை அணுகி, முறையான ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று இந்த பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum