சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.பல மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தாலும், தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுகூட்டல் விண்ணப்பங்களும் தயாராய் உள்ளன.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் எந்த ஒரு பாடத்துக்கும் விடைத்தாள் நகல் கேட்டோ அல்லது மறு கூட்டல் செய்யவோ விண்ணப்பிக்கலாம். அப்படி விரும்புவோர் இன்று முதல், 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதே பாடத்துக்கு மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க கூடாது.
விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் பெறுவதற்கு பகுதி 1 மொழி ரூ.550, பகுதி 2 மொழி ஆங்கிலம் ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்.
மறுகூட்டல் செய்ய பகுதி 1 மொழி, பகுதி 2 ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.