You are not connected. Please login or register

Post-#17/6/2014, 3:52 pm

Aditya Sundar

JOIN TODAY

சுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும் - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி Empty சுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும் - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி


டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டதாகவும், அது அவருக்கும் தெரிந்துள்ளதாகவும் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

கடந்தாண்டு இறுதிகளில், மத்திய மனித வள அமைச்சராக பதவி வகித்த காங்கிரசின் சசிதரூருக்கும், அப்போதைய குஜராத் முதல்வரும் இப்போதைய பிரதமருமான நரேந்திரமோடிக்கும் ட்விட்டரில் பெரும் வார்த்தை யுத்தமே நடந்துவந்தது. சசிதரூரின் காதல் மனைவியான சுனந்தா புஷ்கரை, ரூ.50 கோடி காதலி என்று மோடி வர்ணித்தார்.

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சாவதற்கு சில நாட்கள் முன்புதான், சசிதரூருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கும் காதல் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்து சுனந்தா புஷ்கர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். எனவே அவரது சாவில் சந்தேகம் வலுத்தது. இருப்பினும் இதுகுறித்து சசிதரூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நரேந்திரமோடி தலைமையிலான அரசு தற்போது மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. மோடி பிரதமரானது முதலே, சசிதரூரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. இப்போது திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பியாக உள்ள சசிதரூர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் நரேந்திரமோடியின் நடவடிக்கைகளை பாராட்டி கீச்சு வெளியிட்டு வருகிறார். இவரது மாற்றம் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி 'நியூஸ் எக்ஸ்' சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மோடி மீதான பார்வையில் சசிதரூரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக சசிதரூர் தனக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமோ என்று பயப்படுகிறார். நான் வெளிப்படையாக இந்த தொலைக்காட்சி சேனலில் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டார். ஆம்... அவர் கொல்லப்பட்டார். ஆனால் சசிதரூர் அக்கொலையை செய்யவில்லை. அதே நேரம், யார் சுனந்தாவை கொலை செய்தது என்பது சசிதரூருக்கு நன்றாக தெரியும்.

சட்டப்பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது போன்றவை இந்துத்துவாவாதிகள் கோரிக்கை. ஆனால் நரேந்திரமோடி அதில் கவனம் செலுத்துவாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை மோடி இந்துத்துவா சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால், ஓராண்டுக்கு மக்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள். அதன்பிறகு தங்கள் கோரிக்கைகளை எழுப்ப தொடங்குவர். பிரச்சினைகள் தொடங்கும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum