You are not connected. Please login or register

Post-#130/4/2014, 1:41 pm

Aditya Sundar

JOIN TODAY

பாலியல் தொழிலுக்காக சென்னைக்கு வரும் வட கிழக்கு மாநிலப் பெண்கள்... ஷாக் ரிப்போர்ட் Empty பாலியல் தொழிலுக்காக சென்னைக்கு வரும் வட கிழக்கு மாநிலப் பெண்கள்... ஷாக் ரிப்போர்ட்


சென்னை: பாலியல் தொழில் புரிவதற்காக பல வெளிமாநில அழகிகள் சென்னைக்கு அழைத்து வரப் படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபச்சார சுற்றுலாவைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் போலீஸார் இறங்கியுள்ளனர்.

சென்னை கே.கே.நகர் 69-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண்களை வைத்து ஒரு கும்பல் பாலியல் தொழில் செய்வதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானது. அந்த வீட்டில் இருந்த வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அசாம், நாகலாந்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டு மயிலாப்பூர் காப்பத்தில் சேர்க்கப் பட்டனர்.

மேலும், அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபத்தியதாக நாகலாந்தை சேர்ந்த புரோக்கர் குரோம், ஆல்வின் எபினேசர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் தொழிலுக்காக வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல், அடையார் பரமேசுவரிநகர் முதல் தெருவில் சொகுசு பங்களாவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். பெண் புரோக்கர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 58 வழக்குகள் பதிவு செய்யபபட்டுள்ளதாகவும், 98 பாலியல் புரோக்கர்கள் கைதாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 125 இளம்பெண்கள் இத்தொழிலில் இருந்து மீட்கப் பட்டு காப்பகத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

காப்பகங்களில் சேர்க்கப்படும் மீட்கப்பட்ட பெண்கள் மீண்டும் இத்தொழிலுக்கே திரும்பும் அவல நிலையே இருப்பதாக கூறப்படுகிறது. ரயில் மற்றும் விமான மார்க்கமாக இத்தொழிலுக்கு அழைத்து வரப்படும் வட மாநில இளம்பெண்கள் புரோக்கர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

ஒரு புரோக்கர் வசம் இருக்கும் 10 பெண்கள் ஒரு மாதம் கழித்து வேறொரு புரோக்கரிடம் சென்று விடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum