You are not connected. Please login or register

Post-#19/5/2014, 5:41 pm

Aditya Sundar

JOIN TODAY

பிளஸ் டூ தேர்வு: கரூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த சேரன் பள்ளி மாணவர்கள் Empty பிளஸ் டூ தேர்வு: கரூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த சேரன் பள்ளி மாணவர்கள்


கரூர்: கரூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் சேரன் பள்ளி மாணவர் பாரதி முதலிடம் பெற்றார். இந்த மாவட்டத்தில் மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் சேரன் பள்ளி மாணவர் பாரதி முதலிடம் பெற்றார். அவர் 1200க்கு 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

1185 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை சேரன் பள்ளி மாணவர் கவின் பெற்றுள்ளார். மேலும் 1184 மதிப்பெண்களுடன் சேரன் பள்ளி மாணவி அகல்யா மாவட்டத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 294 பேர் தேர்வு எழுதினர். இதில் 9 ஆயிரத்து 570 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 5 ஆயிரத்து 266 பேர் ஆகும். மாணவிகள் 4 ஆயிரத்து 344 பேர் ஆவர். மொத்த தேர்ச்சி சதவிகிதம் 92.97 ஆகும்.

கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் பாரதி, இரண்டாம் இடம் பெற்ற மாணவர் கவின். மூன்றாம் இடம் பெற்ற மாணவி அகல்யா ஆகியோருக்கு அவர்களது பெற்றோர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும், அவர்களுக்கு பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

டி.என்.பி.எல். பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி:

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் செயல்பட்டு வரும் டி.என்.பி.எல். மெட்ரிக் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர், மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வில் டி.என்.பி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி அனுசா 1,175 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி ஆர். பிரியங்கா 1,174 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், மாணவி முகில் 1,171 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அனுசா, இரண்டாம் இடம் பெற்ற மாணவி பிரியங்கா, மூன்றாம் இடம் பெற்ற மாணவி முகில் ஆகிய மூவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளியம்மை இனிப்பு வழங்கி பாராட்டினார்.

இதே போல வெற்றி பெற்ற மாணவிகளின் பெற்றோர்களும், சக மாணவிகளும் அவர்களுக்கு இனிப்பு ஊட்டி பாராட்டினர்.

பள்ளியில் மொத்தம் 115 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 57 பேரும், மாணவிகள் 58 பேரும் அடக்கம். தேர்வு எழுதிய 115 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டி.என்.பி.எல். மெட்ரிக் பள்ளி டி.என்.பி.எல். ஆலை சார்பில் நடத்தப்படும் பள்ளியாகும். இந்த பள்ளி கடந்த 2012, 2013ம் வருடமும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக வள்ளியம்மை பொறுப்பேற்றது முதல் 100 சதவிகிதம் தேர்ச்சி சாத்தியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post-#4


JOIN TODAY

பிளஸ் டூ தேர்வு: கரூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த சேரன் பள்ளி மாணவர்கள் Empty Re: பிளஸ் டூ தேர்வு: கரூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த சேரன் பள்ளி மாணவர்கள்


View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum