You are not connected. Please login or register

Post-#12/6/2014, 7:10 am

Aditya Sundar

JOIN TODAY

தமிழக மின் பற்றாக்குறையை தீர்க்க 4 ஆயிரம் மெகா வாட் மின் திட்டங்கள் தயார் Empty தமிழக மின் பற்றாக்குறையை தீர்க்க 4 ஆயிரம் மெகா வாட் மின் திட்டங்கள் தயார்


நெல்லை: தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுபாட்டை போக்க 4 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மின்தேவை நாள் ஓன்றுக்கு 12900 மெகா வாட்டாக உள்ளது. ஆனால் உற்பத்தியோ 11500 மெகா வாட்டாக உள்ளது. சுமார் 1400 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிலையில் காற்றாலை மற்றும் அதிகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களிலுள்ள நம்பிக்கையின் காரணமாக ஜூன் 1ம் தேதி முதல் மின்வெட்டு முற்றிலும் நீக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

காற்றாலை உற்பத்தி:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்று அதிகம் வீசுவதால் காற்றாலை மூலம் சுமார் 4 ஆயிரம் மெகா வாட் வரை மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மின்வெட்டு ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது காற்று சீசன் தொடங்கியுள்ளதால் நாள்தோறும் சுமார் 2500 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

அனல்மின் நிலையங்கள்:

இந்த நிலையில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் 660 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இதே உற்பத்தி திறனில் மற்றொரு அனல் மின் நிலையமும் அமைக்கப்படுகிறது.

4 திட்டங்கள் 4,180 மெகாவாட் மின்சாரம்:

ராமநாதபுரம் உப்பூரில் 3வது மின் உற்பத்தி திட்டத்தில் 2 யூனிட்டுகளில் சுமார் 800 மெகா வாட் அளவுக்கு பணிகள் நடந்து வருகின்றன. வடசென்னையில் 800 மெகாவாட்டுக்கு 4வது யூனிட்டும் நிறுவ பணிகள் நடந்து வருகின்றன. இந்த நாலு திட்டங்கள் மூலம் 4 ஆயிரத்து 180 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.32000 கோடி:

இதற்கு ரூ.32 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதனால் வரும் மாதத்தில் இருந்து மின்சாரம் தாராளமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுவதால் மின்தடை இனிமேல் இருக்காது என்று கூறப்படுகிறது.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum