மும்பை: மஹாஜன் மற்றும் முண்டே குடும்பத்திற்கு 3ம் தேதி ராசியில்லை என்று மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உறவினர் சாரங்கி மஹாஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே தனது சொந்த மாவட்டமான மகாராஷ்டிரா மாநிலம் பீடில் இன்று மாலை நடக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள டெல்லியில் உள்ள விமான நிலையத்திற்கு இன்று காலை சென்றார். அப்போது சாலை விபத்தில் சிக்கிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். முண்டே குடும்பத் தகராறில் சகதோரர் பிரவீன் மஹாஜனால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த பாஜக தலைவர் பிரமோத் மஹாஜனின் மைத்துனர் ஆவார்.
இந்நிலையில் இது குறித்து பிரவீன் மஹாஜனின் மனைவி சாரங்கி கூறுகையில்,
மாதத்தின் மூன்றாவது நாள் மஹாஜன் மற்றும் முண்டே குடும்பத்திற்கு ராசியில்லை. முண்டேவின் மரணம் எங்களுக்கு பேரிழப்பு என்றார்.
குண்டடிபட்ட பிரமோத் மஹாஜன் 2006ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மரணம் அடைந்தார். மேலும் பிரமோதின் வலது கையாக இருந்த விவேக் மொய்த்ரா 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி மரணம் அடைந்தார். பிரமோதின் சகோதரர் பிரவீன் மஹாஜன் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி மரணம் அடைந்தார்.