முன்பு அஜீத் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போது 48 நாட்கள் விரதம் இருந்திருக்கிறார் நடிகர் விவேக்.
அஜீத், விவேக் இருவரும் நல்ல நண்பர்கள். 'காதல் மன்னன்', 'வாலி', 'முகவரி', 'பூவெல்லாம் உன் வாசம்', 'ஆழ்வார்', 'கிரீடம்' போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இன்றும் நல்ல நட்புடன் உள்ளனர். இப்போதும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் புதுப்படத்தில், மீண்டும் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார்.
விவேக்கிற்கு அஜீத் என்றால், மிகவும் பிடிக்கும். அந்த அன்பை வெளிப்படுத்தக் கூடிய சம்பவம், 'உன்னைத் தேடி' படப்பிடிப்பின்போது நடந்தது.
அப்போது அஜீத் கடுமையான முதுகுவலி காரணமாக அவதிப்பட்டார். என்றாலும், வலியைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆனால், அவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை சொன்னதால், அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. எப்படி தெரியுமா?
அஜீத்தின் கழுத்துக்குக் கீழே துளையிட்டு, அதாவது, முன்புறத்தில் துளையிட்டு, பின்புற கழுத்து பக்கமாக நடந்த அறுவை சிகிச்சை அது. யாரும் சாதாரணமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது.
இவ்விஷயத்தை அறிந்து துடித்த விவேக், நண்பனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, 48 நாட்கள் விரதம் இருக்க முடிவு செய்தார். உடனே திருத்தணி முருகப் பெருமானிடம், 'அஜீத்துக்கு அறுவை சிகிச்சை வெற்றியடைந்து, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும்' என்று வேண்டிக்கொண்டு மாலையணிந்தார்.
48 நாட்கள் விரதம் இருந்து திருத்தணிக்கு சென்று முருகப் பெருமானை தரிசித்த விவேக், அஜீத் உடல்நிலை தேறியதும் சந்தோஷம் அடைந்தார்.
ஆனால் இதை அவர் சொல்லிக் கொள்ளவில்லை. திடீரென பேச்சுவாக்கில் ஒரு நாள் சொல்ல, அது ஒரு மூத்த பத்திரிகையாளர் மூலம் வெளியில் தெரிந்தது.
'என் நண்பன் அஜீத்துக்காகவும், அவரது தூய்மையான நட்புக்காகவும் நான் செய்த ஒரு சிறிய விஷயம் அது. ஏன் அதைப் பெரிதுபடுத்த வேண்டும் என்றுதான், இதனை வெளியே சொல்லவில்லை. ஒரு டி.வி பேட்டியில் இதைப் பற்றிக் கேட்டபோது, மேலோட்டமாக சொல்லியிருந்தேன். இப்போது மீண்டும் அஜீத்துடன் நடித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார் விவேக்.