ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜாவுடன் அவரது 10 வயது மகளும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார். வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் ரோஜா வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அவரது 10 வயது மகள் அன்ஷுமாலிகா மற்றும் கணவர் செல்வமணி ஆகியோரும் வாக்கு சேகரிக்கின்றனர். இது குறித்து அன்ஷு கூறுகையில்,
என் அம்மா கடந்த சில மாதங்களாகவே நகரியில் தங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். அதனால் அவர்களை பார்க்க முடியவில்லை. மேலும் போனில் கூட சரியாக பேச முடியவில்லை.
அம்மாவை பார்க்க வேண்டும் என்பதால் பள்ளி விடுமுறை விட்டவுடன் நகரி வந்துவிட்டேன்.
நான் அம்மாவுடன் சேர்ந்து சில குடிசை வீடுகளுக்குள் சென்றேன். அந்த குடிசைகளை பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது.
ஏம்மா இவங்க குடிசையில் இருக்கிறார்கள் என்று கேட்டபோது அம்மா கூறுகையில், ஜெகன்மோகன் ரெட்டி சார் ஆட்சிக்கு வந்தால் குடிசைகளே இல்லா மாநிலமாக ஆந்திராவை மாற்றுவார் என்றார்.

ராஜசேகர ரெட்டி தாத்தா ஏழைகளுக்காக 50 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்தாராம். அதே போன்று ஜெகன் சாரும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பார் என்று அம்மா சொன்னார்கள்.
ஜெகன் சார் ஆட்சிக்கு வர என் அம்மாவுக்கு மின்விசிறி சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்ற பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அன்ஷு.