மும்பை: பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக நேற்று நள்ளிரவு மும்பையில் கைது செய்யப்பட்ட நடிகை பூனம் பாண்டே உடனடியாக விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் பரவியுள்ளன.

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, மும்பையின் மிரா ரோடு பகுதியில் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கைது செய்ததாகவும் அதன்பிறகு, காவல்துறையினர் எச்சரித்து மீண்டும் இதுபோல நடந்துகொள்ளக்கூடாது என்று கூறி விடுவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கில தொலைக்காட்சி சானல் ஒன்றில் பூனம் பாண்டே காவல் நிலையத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இருப்பினும், இதுகுறித்த தகவல்களை உறுதிப்படுத்த காவல்துறை அதிகாரிகள் முன்வரவில்லை.
உள்ளாடை அணியாமல் பொது நிகழ்ச்சியில் வந்து சர்ச்சைக்கு உள்ளானவர் இந்த பூனம் பாண்டே என்பது நினைவிருக்கலாம்.