சென்னை: நல்ல கதையம்சமுள்ள படங்களில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயாராக இருப்பதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘நான் ஈ' தவிர சொல்லிக் கொள்கிற மாதிரி வெற்றிப் படங்கள் எதையும் தரவில்லை என்ற போதும், நடிகை சமந்தாவுக்கு இங்கு நல்ல வரவேர்பு இருக்கத் தான் செய்கிறது.
இவர் தற்போது விஜய் ஜோடியாக கத்தி படத்திலும் சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக செய்திகள் வெளியாயின.
அத்துடன் சிறு பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்கள் படங்களில் நடிக்க சமந்தா மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டப் பட்டது. ஆனால் இவற்றை மறுத்துள்ளார் சமந்தா. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-
என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரவி உள்ளன. எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல கேரக்டர்கள்தான் முக்கியம். நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் சம்பளத்தை குறைக்க தயாராக இருக்கிறேன்.

எனக்கு ரொம்ப ஷாக் கொடுக்கும் கதையாக இருந்தால் அந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயார். சிறு பட்ஜெட் படங்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. நல்ல கதை என்று எனக்கு தோன்றினால் அந்த படத்தில் நடிப்பதற்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அந்த படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்தாற் போல் சம்பளம் வாங்கிக் கொள்வேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.