You are not connected. Please login or register

Post-#18/5/2014, 2:36 pm

Bharathi

JOIN TODAY

முதல் பெண் சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்பு Empty முதல் பெண் சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்பு


டெல்லி: சிபிஐ கூடுதல் இயக்குநராக பெண் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

[img]முதல் பெண் சிபிஐ கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்பு R1hif4[/img]

தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

சி.பி.ஐ. அமைப்பின் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

இவர் ஏற்கனவே சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி மற்றும் முதல் பெண் இணை-இயக்குனர் பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு பொருளாதார குற்றங்களை திறமையாக கையாண்டுள்ளார்.

குறிப்பாக முத்திரை தாள் மோசடி வழக்கை புலன் விசாரணை செய்து பல அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றவர். இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் பிரதமர் தலைமையிலான நியமன குழு இதற்கான ஒப்புதலை வழங்கியது.

இவரது நியமனத்தை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் பத்திரிகையாளர் வினித் நரேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி லோதா தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் அர்ச்சனாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் அர்ச்சனா ராமசுந்தரம் இன்று சிபிஐ கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.

View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Similar topics

+

Permissions in this forum:
You cannot reply to topics in this forum