Latest topics» யாகாவாராயினும் நா காக்க! - Movie First Look Poster by Aditya Sundar 15/7/2014, 11:26 pm » அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் by Admin 11/7/2014, 6:16 pm » ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி by Bharathi 23/6/2014, 10:17 pm » இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு!! by Bharathi 23/6/2014, 10:09 pm » பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் "நமோ" by Bharathi 23/6/2014, 10:06 pm | அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நான் பார்த்த, அந்த இரண்டு நிகழ்ச்சிகள்தாம், இக்கட்டுரைத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கின. ஆறேழு மாதங்களுக்கு முன்பாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா, நானா' நிகழ்ச்சியில், நண்பர் கோபி, இளைஞர்களைப் பார்த்து ஒரு வினாவை முன்வைக்கின்றார். "நீங்கள் அறிந்த வாழும் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரின் பெயர்களைச் சொல்லுங்கள்". சில நொடிகள் அமைதியாய்க் கழிகின்றன. எவரிடமிருந்தும் எந்த விடையும் வரவில்லை. "ஒரு எழுத்தாளர் பெயர் கூடவா, உங்கள் நினைவுக்கு வரவில்லை?" என்று திருப்பிக் கேட்டவுடன், ஓர் இளைஞர் கை உயர்த்துகின்றார். ஒலிவாங்கியைக் கையில் வாங்கி, "எழுத்தாளர் மு.வ." என்கிறார். அந்த அரங்கில் வேறு எந்த விடையும் வரவில்லை. மு.வ.வின் பெயரைக் குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சிதான் … [ Full reading ] Comments: 14 தமிழக அரசுடன் மல்லுக்கட்டும் நோக்கியா!! சென்னை: பின்லாந்து நாட்டின் மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான நோக்கிய நிறுவனத்தின் மீது வரி செலுத்துவது தொடர்பாக வழக்கை தமிழக அரசு தொடுத்துள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த வழக்கின் விசாரித்த நிதிபதி வரி நிலுவை தொகையில் ரூ.2404 கோடியில் 10 சதவீதத்தை மதிப்பு கூட்டு வரியாக செலுத்த வேண்டும் என்று நிதிபதி தெரிவித்தார். நீதிபதியின் ஆணையை மாற்றும் படி, நோக்கியா இந்தியா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் வரி சலுகை வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று நீதிபதியான பி.இராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு வணிக வரித் துறையினரின் கோரிக்கையின் படி, 2009-10 முதல் 2011-12 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான மதிப்பு கூட்டு வரியை நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று நீதிபதியான பி.இராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு வணிக வரித் துறையினரின் கோரிக்கையின் படி, 2009-10 முதல் 2011-12 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான மதிப்பு கூட்டு வரியை நோக்கியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இந்நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை ரூ.2390 கோடிகள் என்று தொடர்புபடுத்திக் காட்டிய நீதிபதி, மொத்தமாக 2404 கோடி ரூபாய்க்கு வரி சலுகையை நோக்கியா கேட்டிருப்பதை பாராட்டுவதற்கில்லை என்கிறார் நிதிபதி. வெளிநாட்டு விற்பனையில், இந்தியாவில் விற்பனையாகும் பொருட்களுக்கு வரி செலுத்த தேவையில்லை, மற்றும் வெளிநாட்டு விற்பனையை நாடுகளுக்கு-இடையிலான விற்பனையாக கருதி மத்திய விற்பனை வரியையும் விதிக்க வேண்டியதில்லை. எனவே, மொத்தமாக 10 சதவீதம் வரி கோரிக்கையை செலுத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்கிறார்கள் நோக்கியாவினர். பெரும்பான்மையான விற்பனைகள் அனைத்துமே வெளிநாட்டு பரிமாற்றங்களாகவே நோக்கியா இந்தியா பராமரித்து வருகிறது, ஆனால் அதிகாரிகள் அவற்றை உள்நாட்டு விற்பனைகளாகவே கருதியிருக்கிறார்கள். வரும் ஜூன் 25-ம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. Comments: 0 கிரேடிட் கார்டு பயனாளிகளுக்கு ஒர் நற்செய்தி!! ரிசர்வ் வங்கியின் புதிய அறிவுப்பு.. மும்பை: கிரெடிட் கார்டின் நிலுவை தொகை செலுத்துவதில் கால தாமதத்திற்கான கட்டணத்தை வசூலிக்க ஒரு மாதம் காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று தனியார் மற்றும் பொத்துறை வங்கிகளுக்கு வங்கி கட்டுப்பாட்டு ஆணையமான ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக கிரேடிட் கார்டு வைத்திருப்போர் மாத மாதம் பில்லிங் பெறுவர், இத்தகைய பில்லிங் சைக்கிளிங் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும் அல்லது கார்டு பெற்ற தேதியில் இருந்து கணக்கிடப்படும். கடன் தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் உங்கள் கடன் தொகையை வங்கியில் குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகை செலுத்த தவறினால் வங்கிகள் அபராதமாக தாமதக் கட்டணமாக வங்கிகள் ரூ. 100 முதல் ரூ. 700 வரை வசூலிக்கின்றன. இத்தகைய கடன் தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், பொரும்பாலன வங்கிகள் ரூ. 700-ஐ தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன. குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அடுத்த நாளே தவணை தொகை செலுத்தினாலும் இந்த கால தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடன் தொகைக்கு ஏற்றவாறு தாமதக் கட்டணம் அதிகரிக்கவும், குறைக்கவும் செய்யும். இந்நிலையில், கிரெடிட் கார்டின் தவணைத் தொகை கிரெடிட் கார்டு உரிமையாளர் செலுத்துவதில் 30 நாள்கள் வரை அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கெடு தேதிக்குள் தவணை செலுத்தாவிடினும், ஒரு மாதத்துக்குள் செலுத்தினால் கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது. குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் கடன் அட்டை அளிக்கும் நிறுவனங்கள் சில சமயங்களில் குறித்த தேதியில் தவணைத் தொகை செலுத்தாவிடில் அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவு திடீர் செலவுக்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளிக்கும். மேலும் இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக இது உதவும். Comments: 0 ஏழை நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்!! ஆக்ஸ்போர்டு கணிப்பு.. டெல்லி: பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடந்திய உலக நாடுகளின் வறுமை கணிப்பு ஆய்வில் இந்தியாவிற்கு 2வது இடம் கிடைத்துள்ளது, இதில் சில திடுக்கிடும் உண்மைகளும் கிடைத்துள்ளது. இந்தியா வளரும் நாடுகளில் முதன்மையான ஒன்று என்பது நாம் அனைவரும் தெரியும். இந்நிலையில் ஏழை நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென் ஆசிய பகுதியில் இருக்கும் ஏழை நாடுகளை பற்றி நடத்திய ஆய்வில் இந்தியா 340 மில்லியன் ஆதரவற்ற மக்களை கொண்டு இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது, இதில் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை படித்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் கிடைத்த தகவலின் படி உலகின் 49 நாடுகளின் மொத்த ஏழை மக்கள்தொகையில் 40 சதவீத மக்கள் இந்தியாவில் உள்ளதாக ஆக்ஸ்போர்டின் பல பரிமாண வறுமை குறீயிடு (MPI) 2014 தெரிவிக்கிறது. தென் ஆசிய பகுதியில் ஆப்கானிஸ்தானில் 38 சதவீத ஆதரவற்ற மக்களும், இந்தியாவில் 28.5 சதவீதம் ஆதரவற்ற மக்கள் உள்ளதாக இந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அதேபோல் இந்தியாவின் அண்டை நாடான பாங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானில், 17.2 சதவீதம் மற்றும் 20.7 சதவீதம் ஆதரவற்ற மக்கள் உள்ளனர் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்பட்டியலில் டாப் 5 இடங்களை பிடித்த நாடுகளை இப்போது பார்போம். இதில் முதல் இடத்தை பிடித்தது ஆப்கானிஸ்தான், தனது மொத்த மக்கள் தொகையில் 66 சதவீத மக்கள் MPI கோட்டிற்கு கீழ் உள்ளனர். இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீத மக்கள் MPI கோட்டிற்கு கீழ் உள்ளனர். இது இந்தியாவின் மோசமான பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையை காட்டுகிறது. இந்தியாவின் அண்டை நாடான வங்காளம் இதில் முன்றாவது இடத்திலும், பாக்கிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது. இவைகளை தொடந்து நேபால், பூட்டான், இலங்கை, மால்தீவுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறது. ஆய்வு நடத்தப்பட்ட 49 நாடுகளில் இந்தியாவின் பீகார் மாநிலம் மிகவும் வறுமையான பகுதியாக கருதப்படுகிறது. Comments: 0 32வது வினாடியில் கோல் போட்டு அமெரிக்க வீரர் சாதனை ரியோடி ஜெனிரோ: நடப்பு உலக கோப்பையில் அதிவிரைவாக கோல் அடித்த பெருமையை அமெரிக்க கேப்டன் பெற்றுள்ளார். பிரேசிலில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று அமெரிக்கா- கானா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கானாவுக்கு எதிராக அமெரிக்க கேப்டன் கிளைன்ட் டெம்சே ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் 32 வினாடிகளில் கோல் போட்டார். உலக கோப்பையில் இது 5வது துரித கோல் ஆகும். முன்னதாக துருக்கியின் ஹகான் சுகூர் 2002ம் ஆண்டு உலக கோப்பைபோட்டியில் தென்கொரிய அணிக்கு எதிராக 11வது வினாடியில் கோல் அடித்ததுதான் உலகின் வேகமாக கோலாகும். முதலிலேயே அமெரிக்கா கோல் போட்டாலும், சுதாரித்துக்கொண்ட கானா, 82வது நிமிடத்தில் ஒரு கோல்போட்டு சமன் செய்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அமெரிக்காவின் ஜான் ப்ரூக்ஸ் ஒரு கோல் போட்டு கானாவின் கனவை தகர்த்தார். முதல் மற்றும் கடைசி நிமிடங்கள்தான் கானாவுக்கு எதிராக மாறின என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு உலக கோப்பைகளிலும் கானாவிடம் தோல்வியடைந்திருந்த அமெரிக்கா அதற்கு இந்த போட்டியின் மூலம் பழி தீர்த்துக்கொண்டது. Comments: 0 அஜீத்துக்காக 48 நாட்கள் விரதம் இருந்த விவேக்! முன்பு அஜீத் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த போது 48 நாட்கள் விரதம் இருந்திருக்கிறார் நடிகர் விவேக். அஜீத், விவேக் இருவரும் நல்ல நண்பர்கள். 'காதல் மன்னன்', 'வாலி', 'முகவரி', 'பூவெல்லாம் உன் வாசம்', 'ஆழ்வார்', 'கிரீடம்' போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இன்றும் நல்ல நட்புடன் உள்ளனர். இப்போதும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் புதுப்படத்தில், மீண்டும் அஜீத்துடன் இணைந்து நடிக்கிறார். விவேக்கிற்கு அஜீத் என்றால், மிகவும் பிடிக்கும். அந்த அன்பை வெளிப்படுத்தக் கூடிய சம்பவம், 'உன்னைத் தேடி' படப்பிடிப்பின்போது நடந்தது. அப்போது அஜீத் கடுமையான முதுகுவலி காரணமாக அவதிப்பட்டார். என்றாலும், வலியைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆனால், அவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று … [ Full reading ] Comments: 0 பியாஸ் நீரில் மூழ்கிப் பலியான மாணவர்கள்... 4 பேரின் உடல் ஹைதராபாத் வந்தது ஹைதராபாத்: இமாச்சல பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் மூழ்கிப் பலியான 24 மாணவர்களில், மீட்கப்பட்ட 4 பேரது உடல் விமானம் மூலமாக ஹைதராபாத் வந்து சேர்ந்தது. கல்விச் சுற்றுலாவாக இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்ற ஹைதராபாத் பொறியியல் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கினர். இதில் 24 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டனர். நீரில் மூழ்கிவர்களின் உடலைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மீட்கப்பட்ட 4 மாணவர்களின் உடல்கள் விமானம் மூலமாக சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 48 மாணவ, மாணவிகள் தங்கள் ஆசிரியர்களுடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். கடந்த 8 ஆம் தேதி மணாலிக்கு அருகில் உள்ள பியாஸ் ஆற்றில் இறங்கி மாணவர்கள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 24 மாணவ, மாணவிகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஆற்றில் மூழ்கிய 3 மாணவிகள், 2 மாணவனை நேற்று முன்தினம் சடலமாக மீட்டனர். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உயிர் தப்பிய 24 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மாலை சிறப்பு விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதே போல, மற்றொரு ராணுவ சிறப்பு விமானத்தில் மாணவிகள் விஜிதா, லட்சுமி காயத்ரி, ஐஸ்வர்யா, மாணவன் ராம் பாபு ஆகியோரின் சடலங்கள் அவர்களது சொந்த ஊரான ஹதராபாத்துக்கு அனுப்பப்பட்டது. சுற்றுலா சென்ற பிள்ளைகள், சடலமாக திரும்பியதை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறியது நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது. Comments: 2 த்ரிஷ்யம்... தெலுங்கிலும் மீனாதான் நாயகி! த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக, படத்தினி நாயகியாக நடிக்கிறார் மீனா. பொதுவாக திருமணமாகி குழந்தை பெற்ற பின், அக்கா, அண்ணி, அம்மா வேடங்களுக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நடிகைகள். ஆனால் மீனா இதில் விதிவிலக்கு. திருமணமாகி, ஒரு குழந்தை பெற்ற பின்பும் அவர் நாயகியாகவே படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திருமணத்துக்குப் பின் அவர் நடித்த மலையாளப் படம் த்ரிஷ்யம். இதில் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் கேரள திரையுலக வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது, வசூல் மற்றும் பாராட்டுகளைக் குவித்ததில். த்ரிஷ்யம் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். தமிழில் கமல் நடிக்கிறார். கன்னடத்தில் பி வாசு இயக்க, ரவிச்சந்திரன் நடிக்கிறார். தெலுங்கில் இந்தப் படத்தை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து வெங்கடேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். த்ரிஷ்யம் வெற்றி மீனாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக பால்யகாலசகி படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் த்ரிஷ்யம் தவிர, வேறு ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார். திருமணமான பிறகு தமிழில் அவர் எந்தப் படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Comments: 0 பியாஸ் ஆற்றில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு: சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்: இமாச்சலபிரதேசத்தில் பியாஸ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விஞ்ஞான ஜோதி என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 50 பேர் கல்வி சுற்றுலாவாக இமாசலபிரதேச மாநிலத்துக்கு சென்றனர். அவர்களில் 24 பேர் நேற்று மாலை மனாலி-கிராப்துர் சாலையில் உள்ள தலாட் என்ற இடத்தில் உள்ள பியாஸ் ஆற்றின் கரையோரமாக நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது பியாஸ் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதில் ஆற்றின் அருகே நின்று படம் எடுத்துக்கொண்டிருந்த 18 மாணவர்களும், 6 மாணவிகளும் என மொத்தம் 24 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். உடனடியாக அவர்களை தேடும் பணியில் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், 6 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மேலும் காணாமல் போன 18 மாணவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன. சுற்றுலா சென்ற மாணவர்கள் அனைவரும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் என்றாலும் சீமாந்திரா அரசு அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. இறந்த மாணவர்களின் உடல்கள் இமாசல பிரதேசத்திலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு கொண்டுவர சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பதவியேற்ற சந்திரபாபு நாயுடு நேற்று நிவாரண நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜாபதி ராஜீ மற்றும் மாநில அமைச்சர் நாராயணா ஆகியோரிடம் பேசி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை நீட்டிக்குமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இமாச்சல பிரதேச விபத்தில் பலியான என்ஜினீயரிங் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்குவதாக நேற்று அறிவித்துள்ளார். Comments: 0 இலங்கையில் ஜெயலலிதா படத்துக்கு கொம்பு வைத்து கொடும்பாவி எரிப்பு: புகைப்படங்கள் கொழும்பு: இலங்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிக்கப்பட்ட புகைப்படங்களை அந்நாட்டு உயர் அதிகாரி லக்ருவன் வன்னியராச்சி என்பவர் வெளியிட்டுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே சேதிய அமைப்பின் சம்மேளனம் இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இந்நிலையில் அந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இலங்கை போலீஸ் உயர் அதிகாரி லக்ருவன் வன்னியராச்சி என்பவர் வெளியிட்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவுக்கு கொம்பு வைத்தது போன்ற புகைப்படம் அடங்கிய பலகையை ஏந்தி வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி என்ன சர்வாதிகாரியா அல்லது ஜனநாயகவாதியா என்று கேள்வி எழுப்பிய பலகையை போராட்டக்காரர்கள் ஏந்தி வந்தனர். போராட்டக்காரர்கள் வைத்திருந்த பலகையில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு கீழ் எ புல் இன் தி சைனா ஷாப் (A Bull in the China Shop) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. போராட்டக்காரர்கள் ராஜபக்சேவின் புகைப்படம் அடங்கிய பலகையை வைத்திருந்தனர். அதில் இனி அடிபணியப் போவது இல்லை, சரணடையப் போவது இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதை கண்டிப்பதாக எழுதப்பட்டிருந்த பேனரை போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர். இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். Comments: 6 உன் சமையலறையில் மாதிரி கண்ணியமான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன் - சினேகா சென்னை: உன் சமையலறையில் படத்தில் கிடைத்தது போல கண்ணியமான வேடங்கள் தொடர்ந்து கிடைத்தால் நடிப்பேன், என்றார் சினேகா. சினேகா, பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்த ‘உன் சமையலறையில்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்தில் சினேகாவின் வேடம் பெரிதும் பாராட்டப்பட்டது. இதுகுறித்து சினேகா பேசுகையில், "உன் சமையலறையில்' படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்தது. படத்தை பார்த்து நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை பாராட்டிக் கொண்டுள்ளனர். எனக்கு இந்த கேரக்டரை கொடுத்த பிரகாஷ்ராஜுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. எனது கணவர் பிரசன்னா எல்லா விஷயங்களிலும் எனக்கு துணையாக இருக்கிறார். உற்சாகப்படுத்துகிறார். திருமணமாகி இரு ஆண்டுகள் ஆகிவிட்டன. சந்தோஷமாக இருக்கிறது எங்கள் குடும்ப வாழ்க்கை. நல்ல கதைகளில் தொடர்ந்து நடிப்பேன், எனது குடும்பத்தினர் திரையில் என்னை பார்க்கும்போது பெருமைப்படவேண்டும், முகம் சுழிக்கக் கூடாது. அதுமாதிரி கண்ணியமான வேடங்களில்தான் நடிப்பேன். நிச்சயம் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். வயதான வேடங்களில் நடிக்கவும் எனக்கு ஆட்சேபனை இல்லை. நல்ல கதையும், உன் சமையல் அறையில் படத்தில் அமைந்த மாதிரி கண்ணியமான பாத்திரமும் அமைந்தால் என் கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பேன்," என்றார். Comments: 0 பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் முன்பு 4 பேரை காப்பாற்றிய மாணவர் கிரண் குமார் ஹைதராபாத்: இமாச்சல பிரதேசத்தில் பிாயஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் முன்பு மாணவர் கிரண் குமார் 4 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் நதியின் அழகை ரசித்தனர். அப்போது லார்ஜி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 6 மாணவிகள் மற்றும் 18 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 2 மாணவிகள் உள்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நின்று மாணவ, மாணவியர் புகைப்படம் எடுத்தபோது ஏதோ விபரீதம் நடக்கப் போவதை மாணவர் கிரண் குமார் என்பவர் உணர்ந்துள்ளார். ஆற்றில் திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை பார்த்த கிரண் உடனடியாக மாணவி பிரதியுஷா உள்ளிட்ட 4 பேரை கரை சேர்த்துள்ளார். 4 பேரின் உயிரை காப்பாற்றிய கிரண் கரை ஏறும் முன்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தெலுங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரண் குமாரின் தந்தை வெங்கட்ரமணா தனது மகன் உ.யிருடன் வருவார் என்று நம்பிக்கையுடன் உள்ளார். தனது மகனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால் அவர் நிச்சயம் நீந்தி கரை சேர்ந்திருப்பார் என்று நம்புகிறார். கிரண் குமார் உயிருடன் ஊர் திரும்ப வேண்டும் என்று அவரது குடும்பத்தார், நண்பர்கள் என்று ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். Comments: 0 சன் டி.வி.க்கு முறைகேடாக பி.எஸ்.என்.எல் இணைப்புகள்: 2வது நாளாக சிபிஐ கிடுக்குப் பிடி விசாரணை!! சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீதான பி.எஸ்.என்.எல் இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 2வது நாளாக சிபிஐ இன்றும் விசாரணை நடத்தியது. சென்னை போட் கிளப்பில் உள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதிமாறனின் வீட்டிலிருந்து, அதிநவீன வசதி கொண்ட பி.எஸ்.என்.எல்.லின் 323 இணைப்புகள் முறைகேடாக சன் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது என்பது புகார். இதனால் சுமார் 440 கோடி ரூபாய் அளவுக்கு பி.எஸ்,என்.எல்லுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, தயாநிதிமாறன் தனது சகோதரரின் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கை சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் தூசி தட்டி அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வழக்கு குறித்து விசாரிக்க டெல்லியிலிருந்து நான்கு பேர் கொண்ட சி.பி.ஐ குழு சென்னை வந்துள்ளது. சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகியான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவிடம் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் இந்த நிலையில் மற்றொரு சன். டி.வி முன்னாள் நிர்வாகியான சரத் ரெட்டியையும் சிபிஐ விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியிருந்தது. சன். டி.வியில் இருந்த சரத் ரெட்டி பின்னர் கலைஞர் டிவி இயக்குநராக மாறினார். அவரிடம் சென்னையில் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் சக்ஸேனாவிடமும் இன்று 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கின்றனர். Comments: 0 17 வயது பெண்ணை திருமணம் செய்யும் சோயிப் அக்தர் கராச்சி: ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லப்பெயரோடு அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கு ஜூன் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஹரிபுரைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தாக் கானை அக்தர் குடும்பம் கடந்த வருடம் ஹஜ்ஜில் சந்தித்தது. அப்போது முஸ்தாக் கான் மனைவியிடம் தங்களது 39-வயது மகனான சோயிப் அக்தருக்கு பொருத்தமான பெண் இருந்தால் சொல்லவும் என்று கேட்டுக்கொண்டனர். பாகிஸ்தானுக்கு திரும்பிய பின்னரும் அவர்களது தொடர்பு தொடர்ந்தது. இறுதியில் அவர்கள் ருபாப் என்ற பெண்ணை அக்தருக்கு பேசி முடித்துள்ளனர். ருபாப்-க்கு 17 வயதுதான் ஆகிறது. அவருடன் உடன்பிறந்தவர்கள் 3 சசோதரர்களும், ஒரு தங்கையும் உள்ளனர். திருமணத்திற்காக தனது சொந்த ஊரான ராவல்பிண்டிக்கு 12-ம் தேதி செல்கிறார் சோயிப் அக்தர். ஜூன் 19-ந்தேதி மெகந்தி நிகழ்ச்சியும், 20-ந்தேதி ரக்சாதி ஹரிபுரிலும், 22-ந்தேதி வலிமா நிகழ்ச்சி ராவல்பிண்டியிலும் திருமணம் நடைபெறும் எனவும் எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Comments: 0 சுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும் - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டதாகவும், அது அவருக்கும் தெரிந்துள்ளதாகவும் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். கடந்தாண்டு இறுதிகளில், மத்திய மனித வள அமைச்சராக பதவி வகித்த காங்கிரசின் சசிதரூருக்கும், அப்போதைய குஜராத் முதல்வரும் இப்போதைய பிரதமருமான நரேந்திரமோடிக்கும் ட்விட்டரில் பெரும் வார்த்தை யுத்தமே நடந்துவந்தது. சசிதரூரின் காதல் மனைவியான சுனந்தா புஷ்கரை, ரூ.50 கோடி காதலி என்று மோடி வர்ணித்தார். இந்நிலையில், சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சாவதற்கு சில நாட்கள் முன்புதான், சசிதரூருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கும் … [ Full reading ] Comments: 0 பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த திட்டம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னை: ஜல்லிக்கட்டு தடையை தொடர்ந்து நாய் கண்காட்சி நடத்தவும் தடை வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை மாடுகள் சித்ரவதைக்கும், கொடுமைக்கும் ஆளாவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியம்மிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதைத்தொடர்ந்து சேவல் சண்டையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சேவல் சண்டைக்கு தமிழக அரசு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து விளையாட்டு ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நாய் கண்காட்சி மற்றும் குதிரை பந்தயத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் அடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். போட்டியின்போது நாய் மற்றும் குதிரைகளை அவற்றின் பயிற்சியாளர்களும், உரிமையாளர்களும் மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். பயிற்சியின்போது சூடு வைத்து மிரட்டி பணிய வைக்கின்றனர். போட்டியின்போது நாய்கள் நீண்டநேரம் தனது உடலை வருத்தி பல சாகசங்களை செய்து காட்டுகிறது. அதனால் அவற்றின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. மேலும் என்ன காரணத்துக்காக நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது என தெரியவில்லை. அதனால் பல பரிசு பொருட்கள் மற்றும் பணம் சம்பாதிப்பது அவற்றின் உரிமையாளர்கள்தான். எனவே நாய் கண்காட்சிக்கும் தடை விதிக்க வேண்டும். குதிரை பந்தயத்தையும் நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு, சேவல் சண்டையை தொடர்ந்து நாய் கண்காட்சி மற்றும் குதிரை பந்தயத்துக்கும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Comments: 0 பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த திட்டம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் லக்னோ: பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். மத்திய அமைச்சராக பதவியேற்ற பின்னர் இன்று சொந்த தொகுதியான உத்தரப்பிரதேசத்தின் லக்னோவுக்கு வருகை தந்தார் ராஜ்நாத்சிங். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது: உள்நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு சந்தித்து வரும் சவால்கள் தீர்க்கப்படும். கடந்த ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு முடங்கிப்போய் இருந்தது. அதை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வர சிறிது காலமாகும். பயங்கரவாதம், மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதம் போன்ற பிரச்சனைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த திட்டம் வகுக்க வேண்டியது அவசியம். அதை தற்போது எனது அமைச்சகம் சவாலாக எடுத்து கொண்டு செய்து வருகிறது. அதன் விவரங்களை வெளியிட மாட்டேன். இந்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். Comments: 0 கோச்சடையான் ஒரு நாள் கலெக்ஷனில் 70 சதவீதத்தை வசூலித்த மஞ்சப்பை! சென்னை: நேற்று வெளியான மஞ்சப்பை படம், ரஜினியின் கோச்சடையான் ஒரு நாள் வசூலித்ததில் 70 சதவீதத்தை வசூலித்துவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்துள்ளனர். ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் நடித்துள்ள படம் மஞ்சப்பை. தாத்தாவுக்கும் பேரனுக்குமிடையிலான உறவைச் சொல்லும் இந்தப் படம் நேற்று வெளியானது. லிங்குசாமியும் இயக்குநர் சற்குணமும் இணைந்து தயாரித்தனர். நேற்று வெளியான இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தை இன்று, படத்தின் தயாரிப்பாளரே வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்தப் படம் முதல் நாளிலேயே நல்ல வசூலைப் பெற்றுள்ளதாம். இது ரஜினியின் கோச்சடையான் பட வசூலில் 70 சதவீதம் இருக்கும் என நம்புவதாக தயாரிப்பாளர் லிங்குசாமி தரப்பில் கூறப்படுகிறது. அப்ப நாளைக்கே சக்ஸஸ் மீட் நிச்சயம்!! Comments: 0 நலிந்தோருக்கு கருணாநிதி ரூ.3.25 லட்சம் நிதி உதவி சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு மருத்துவ உதவிக்காகவும். காகவும், ஏழை மாணவர்கள் கல்விக்காகவும் திமுக தலைவர் கருணாநிதி தனது அறக்கட்டளை நிதியில் இருந்து 3.25 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டது. அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. 10.1.2007-ல் புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கியது போக மீதியுள்ள ரூ.4 கோடியில் வரும் வட்டித் தொகையில் உதவி வழங்கப்படுகிறது. 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.3 கோடியே 20 லட்சத்து 15 ஆயிரம். மேலும் 2014, மே மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 13 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3,25,000, இன்று (சனிக்கிழமை) வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ.3 கோடியே 20 லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை தலைவர் கருணாநிதி வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Comments: 0 அனுமதியில்லாமல் அஜீத் படப்பிடிப்பு... தயாரிப்பாளர், இயக்குநரை விட்டுவிட்டு லைட்பாயைக் கைது செய்த போலீசார்! சென்னை: அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக அஜீத் படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை விட்டுவிட்டனர். வீரம்' படத்துக்கு பின் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். இன்னமும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில், அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றிலும் நடக்கிறது. பாலவாக்கத்தில் உள்ள வி.ஜ.பி. லேஅவுட் காலனியில் கடந்த சில நாட்களாக அஜீத் படப்பிடிப்பு நடந்தது. பெரும்பாலும் இரவில்தான் படப்பிடிப்பு. ஷூட்டிங்குக்காக சாலையில் நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிக வெளிச்சம் பொருந்திய விளக்குகளை வைத்து படப்பிடிப்பை நடத்தினர். இரைச்சல் மற்றும் அதிக வெளிச்சத்தால் அப்பகுதி மக்கள் எரிச்சல் அடைந்தார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர். எதற்கெடுத்தாலும் போலீஸுக்குப் போகிறவர்கள் அல்லது ஆங்கிலுப் பத்திரிகைகளின் லெட்டர் டு த எடிட்டர் பகுதியின் பங்களிப்பாளர்கள். எனவே படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நீலாங்கரை போலீசிலும் புகார் கொடுத்தனர். போலீசார் நேரில் சென்று படப்பிடிப்பு குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதையடுத்து படப்பிடிப்பை போலீசார் நிறுத்தினர். அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக தயாரிப்பு மேலாளர் பிரேம், லைட் பாய் ரமேஷ் மற்றும் உதவியாளர் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். படத்தின் தயாரிப்பாளர் ரத்னத்தையோ, இயக்குநர் கவுதம் மேனனையோ ஒரு கேள்வி கூட கேட்கவில்லை போலீசார்! Comments: 0 சரவணன் என்கிற சூர்யா... எதற்கு இப்படி தலைப்பு வைக்கணும்.. பிறகு மல்லுக் கட்டணும்!! சரவணன் என்கிற சூர்யா... இப்படி ஒரு தலைப்பில் படமெடுத்திருக்கும் ஒரு புது இயக்குநர், இப்போது அதை வெளியிட முடியவில்லை என்று உதவி கேட்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறார். இந்த நிலைக்குக் காரணம், அந்தப் பெயர் நடிகர் சூர்யாவைக் குறிப்பதாக இருப்பதுதான். சூர்யாவின் நிஜப் பெயர் சரவணன் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியுமோ... தமிழ் சினிமாவில் ஒரு பொது விதி இருக்கிறது.. உயிரோடு உள்ள எந்த கலைஞரின் பெயரையும் தலைப்பாக வைக்க வேண்டும் என்றால், அவர்களின் ஆட்சேபணை இல்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பிறகுதான் அந்தத் தலைப்புக்கே அனுமதி தரப்படும். இப்படி ஒரு தலைப்பு வைத்தால், நிச்சயம் அது நடிகர் சூர்யாவைக் குறிக்கும் என்பது தெரிந்தும், ஆரம்பத்திலேயே அவர்களிடம் அனுமதி கேட்காமல், படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதை வெளியிட … [ Full reading ] Comments: 0 குற்றங்கள் மிகுந்து விட்டன.. உ.பியில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்: மாயாவதி கோரிக்கை லக்னோ: நாளுக்கு நாள் உத்தரப்பிரதேசத்தில் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருவதால் அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி. நேற்று உத்தர பிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், அகிலேஷ் அரசின் மோசமான நிர்வாகத்தால் மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மாயாவதி, மாநிலத்தில் காட்டு தர்பார் நடப்பதாக கூறியுள்ளார். அதே போல், நாள்தோறும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் அங்கு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் மாயாவதி. Comments: 0 ரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி! டெல்லி: இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி ரேஸ் கோர்ஸ் இல்லத்திற்கு செல்லும்போது, அவரின் ஆஸ்தான சமையல்காரராக ஏற்கனவே பணிபுரிந்த பத்ரி என்பவரே நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7 ஆம் எண் பங்களாவில் வசித்து வந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பங்களா புதிய பிரதமரான நரேந்திர மோடிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்னும் குஜராத் பவனில்தான் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள புதிய பங்களாவில் இன்று குடியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் அதிகரப்பூர்வ இல்லத்தில், குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் வசிக்க உள்ள முதல் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த அனைத்து பிரதமர்களும் தங்கள் குடும்பத்தினர்கள் அல்லது தனது உறவினர்களுடனாவது வசித்து வந்தனர். ஆனால் மோடி தன்னுடன் சிறிய ஒரு குழுவையே அழைத்து வருகிறார். அதில் மோடியின் தனிப்பட்ட சமையல்காரராக சுமார் 12 வருடங்களாக பணியாற்றும் பத்ரி என்பவரும் உடன் செல்கிறார். Comments: 0 சி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன் சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸனும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தீவிரவாக காதலிக்கிறார்களாம். பாலிவுட், டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி ஹாஸன் ஹரியின் பூஜை படம் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஸ்ருதி, ரெய்னாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் சுரேஷ் ரெய்னா நடிகை ஸ்ருதி ஹாஸன் தனது அதிர்ஷ்ட தேவதை என்று நினைத்து வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது ஸ்ருதி அரங்கிற்கு வராத போதிலும் அவர் சிறப்பாக விளையாடினார். ஸ்ருதி, ரெய்னா இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உறவில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது குறித்து அவர்கள் பொதுவில் பேச விரும்பவில்லை. ஸ்ருதியும், ரெய்னாவும் அவரவர் வேலையில் படுபிசியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து வருகின்றனர் என்றார் அந்த நபர். முன்னதாக ஸ்ருதி நடிகர் சித்தார்த்துடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ரெய்னா முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேலின் மகள் பூர்ணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் பூர்ணா இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்னாவுடனான காதல் விவகாரம் குறித்து அறிந்ததும் முன்னணி நாளிதழ் ஒன்று ஸ்ருதிக்கு போன் மேல் போன் போட்டும் அவர் பதில் அளிக்கவில்லை. Comments: 0 2ஜி வழக்கு: தயாளு அம்மாள் உடல்நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு! டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த தேவையான முகாந்திரம் உள்ளதாக கூறினார். எனவே இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரும் கடந்த 26ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தவிர அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் மனுதாக்கல் செய்தனர். அதேசமயம் மறதி நோய் உள்ளதால் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தயாளு அம்மாளின் வழக்கறிஞர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ நீதிமன்றம், இது தொடர்பாக தயாளு அம்மாள் உடல் நிலை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சட்டவிரோத பணபரிவர்த்தனை குறித்து வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. Comments: 0 Social bookmarking | Most Viewed Topics |